பிப்ரவரி 9ஆம் நாள் முதல் சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே விசா இன்றி பயணம் தொடக்கம்
2024-01-25 16:26:06

கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி விசா இன்றி பயணம் செய்வது குறித்த ஒப்பந்தம் சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே ஜனவரி 25ஆம் நாள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 9ஆம் நாள் முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நாட்டின் மக்கள் விசா இன்றி மற்றொரு நாட்டில் அதிகபட்சமாக 30 நாட்கள் பயணிக்கலாம். அவர்கள், சுற்றுலா, உறவினர்களைக் காணுதல், வணிகம் உள்ளிட்டற்றில் ஈடுபட அனுமதிக்கப்படுவர்.