காசாவுக்கு நிவாரண பொருட்களை வழங்கலை இஸ்ரேல் தடுப்பதற்கு எகிப்து கண்டனம்
2024-01-25 14:42:42

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் முற்றுகையால், காசா பகுதி கடும் மனித நேய நெருக்கடியில் சிக்கியுள்ளது. எகிப்து மற்றும் காசா எல்லை பகுதியிலுள்ள ரஃபா நுழைவாயில் சுமார் 20 இலட்சம் காசா மக்களுக்கு“வாழ்வாதாரத்திற்கான வழியாக” மாறியுள்ளது.

இந்நுழைவாயிலின் மூலம் நிவாரணப் பொருட்களை காசா பகுதிக்கு அனுப்ப இஸ்ரேல் தடை செய்ததை, எகிப்து அரசுத் தலைவர் அப்தல் ஃபாடாஹ் அல் சிசி 24ஆம் நாள் கண்டித்தார். தற்போது, இந்நுழைவாயிலின் மூலம் காசா பகுதிக்குச் சென்றுள்ள லாரிகளின் எண்ணிக்கை பெரிதும் குறைந்துள்ளது. நிவாரணப் பொருட்களை காசாவுக்கு அனுப்புவதை தடுக்க இஸ்ரேல் முயற்சி செய்வதன் மூலம், காசா பகுதி மீது அழுத்தம் திணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.