சீன-அமெரிக்க ராணுவ படைகள், கடல் பாதுகாப்பு கலந்தாய்வு அமைப்பு முறை கூட்டம் பற்றி தொடர்பு கொள்கின்றன
2024-01-25 19:51:04

சீன தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் ஜனவரி 25ஆம் நாள் மாலை நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி பணியகத்தின் தலைவரும் செய்தித்தொடர்பாளருமான வூசியென் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

சீனாவும் அமெரிக்காவும் இவ்வாண்டில் இருநாட்டு ராணுவ படைகள் பரிமாற்றத் திட்டம் பற்றி இவ்வாண்டு துவக்கத்தில் விவாதித்துள்ளன. அதன் விவரங்கள் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

சன்ஃபிரான்சிஸ்கோ சந்திப்பில் சீன-அமெரிக்க தலைவர்கள் இருநாடுகளின் ராணுவப் படைகளிடையையான பரிமாற்றத்தை மீட்பதில் முக்கிய ஒத்த கருத்தை எட்டினர். இரு தரப்பின் கூட்டு முயற்சியுடன், சமத்துவ முறையிலும் மதிப்பளிக்கும் அடிப்பிடையிலும் பேச்சுவார்த்தை நிதானமாக மீட்கப்படும். தற்போது, இருநாடுகளின் ராணுவப் படைகள், கடல் பாதுகாப்பு கலந்தாய்வு அமைப்பு முறை கூட்டம் உள்ளிட்ட பரிமாற்றத் திட்டங்கள் பற்றி தொடர்பு கொண்டுள்ளன என்று வூசியென் கூறினார்.