2025-இல் உலகளவிய அணு ஆற்றல் மின் உற்பத்தி அளவு புதிய பதிவை எட்ட வாய்ப்புண்டு
2024-01-25 19:24:47

சர்வதேச ஆற்றல் முகமை 24ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், 2025ஆம் ஆண்டில் உலகளவில் அணு ஆற்றல் மின்சார உற்பத்தித் திறன் வரலாற்றில் புதிய பதிவை எட்ட வாய்ப்புண்டு. உலகில் தூய்மை எரியாற்றல் துறையின் மேம்பாடு ரீதியான மாற்றம் துரிதப்படுத்துவதன் காரணமாக, வெளியேற்ற அளவு குறைவான எரியாற்றல் அடுத்த 3 ஆண்டுகாலத்தில் உலகில் புதிதாக அதிகரிக்கும் மின்சார தேவையை நிறைவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2025ஆம் ஆண்டின் துவக்கத்தில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் மூலம் மின்சார உற்பத்தித் திறன், நிலக்கரியைத் தாண்டி, உலகளவிய மொத்த மின்சார உற்பத்தித் திறனில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் இருக்கும் என்றும், 2026ஆம் ஆண்டில், சூரியாற்றல், காற்றாற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களும், அணு ஆற்றல் உள்ளிட்ட வெளியேற்ற அளவு குறைவான எரியாற்றல்களும், உலகளவில் மின்சார உற்பத்தி அளவில் சுமார் 50விழுக்காடு பங்காற்றும் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.