அமெரிக்கா விண்வெளி பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்
2024-01-26 20:01:59

விண்வெளியில் சீன அச்சுறுத்தல் கோட்பாடு பற்றி அமெரிக்கா நீண்டகாலமாக பரப்புரை செய்து, சீனாவின் மீது அவதூறு பரப்பி வருகிறது என்பது, விண்வெளியில் தங்களது ராணுவ ஆற்றலை விரிவாக்கி, ராணுவ மேலாதிக்கவாதத்தை நிலைநிறுத்துவதற்கான சாக்குப்போக்கு என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்வென்பின் 26ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

உண்மையில், அமெரிக்கா, விண்வெளியை போர் நடத்தும் இடமாக இருப்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளது. விண்வெளியில் ராணுவ ஆற்றலை பெருமளவில் வளர்த்து, பெரிய நாடுகளிடையேயான எதிர்ப்பைப் பறைசாற்றி, விண்வெளி பாதுகாப்பில் மிக பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. சீனா, விண்வெளியை அமைதியாகப் பயன்படுத்துவதில் ஊன்றிநின்று, விண்வெளியிலான படைக்கலப்போட்டியை எதிர்த்து, சட்ட முறையில் விண்வெளியில் அமைதியைப் பேணிகாத்து வருகிறது என்றும் வாங்வென்பின் தெரிவித்தார்.