தாய்லாந்தில் அமெரிக்க அதிகாரியுடன் வாங்யீ சந்திப்பு திட்டம்
2024-01-26 10:15:48

தாய்லாந்து துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான பாம்பியின் அழைப்பின் பேரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ ஜனவரி 26ஆம் நாள் முதல் 29ஆம் நாள் வரை, தாய்லாந்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றார்.

சீனாவும் அமெரிக்காவும் மேற்கொண்ட கலந்தாய்வு தீர்மானத்தின் படி, தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில், அமெரிக்க அரசுத் தலைவருக்கான தேசியப் பாதுகாப்பு விவகார ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையை வாங்யீ நடத்தவுள்ளார்.