2023இல் ஆரி.சி.இ.பி.ஒப்பந்தத்தால் ஏற்பட்ட சுங்க வரி சலுகை விவரம்
2024-01-26 19:01:40

ஆர்.சி.இ.பி. எனப்படும் பிராந்திய பொருளாதாரக் கூட்டமைப்பு ஒப்பந்தம் அமலுக்கு வந்த இரண்டு ஆண்டுகளில், சீனத் தொழில் நிறுவனங்களுக்கும், இந்த ஒப்பந்தத்தில் இணைந்த கூட்டாளிகளுக்கும் உண்மையான பலன்கள் கிடைத்துள்ளதாக சீன வணிகத் துறை அமைச்சகத்தின் துணை அமைச்சர் வாங் ஷொவென் 26ஆம் நாள் தெரிவித்தார்.

அன்று மாலை சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறுகையில்,

2023ஆம் ஆண்டில் சீனா மற்றும் ஆர்.சி.இ.பி.ஒப்பந்தத்தின் இதர 14 உறுப்பு நாடுகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அளவு 12இலட்சத்து 60ஆயிரம் கோடி யுவானை எட்டியது. இது, 2021ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு இருந்ததை விட, 5.3விழுக்காடு அதிகரித்தது. இதில், இந்த ஒப்பந்தத்தின் இதர உறுப்பு நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்த அளவு 16.6விழுக்காடு அதிகரித்தது. சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மின்சார வாகனம், லித்தியம் மின்கலம், ஒளிமின்னழுத்த தயாரிப்பு ஆகியவையே சிறந்த சாதனைகளைப் படைத்துள்ளன என்று தெரிவித்தார்.

தவிரவும், சுங்க வரி குறைப்பைப் பொறுத்த வரை, ஆர்.சி.இ.பி. ஒப்பந்தத்துக்கு மத்தியில், கடந்த ஆண்டில் சீனத் தொழில் நிறுவனங்களுக்கு சுங்க வரி குறைப்பு அளவு 236கோடி யுவானை எட்டியது. அதே காலத்தில், உறுப்பு நாடுகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்த பொருட்களுக்கு 405கோடி யுவான் சுங்க வரி தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.