செங்கடல் ராணுவ நடவடிக்கையில் பங்கேற்காது - ஸ்பெயின்
2024-01-26 11:16:04

அமெரிக்கா முன்பு கோரியுள்ள கடமைகளாயினும், ஐரோப்பிய ஒன்றியம் தலைமை தாங்கவுள்ள கடமைகளாயினும், செங்கடலில் எவ்விதமான ராணுவ நடவடிக்கையிலும் ஸ்பெயின் பங்கேற்காது என்று ஸ்பெயினின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் மரீயா மார்கரிட ரோப்லெஸ், 25 ஆம் நடைபெற்ற பிரதிநிதிகள் அவையின் தேசியப் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

நேட்டோ அல்லது ஐ.நா.வின் பொறுப்புகளுக்கு அப்பாற்பட்ட அளவில் வேறு எந்த ராணுவ நடவடிக்கையையும் செயல்படுத்த, ஸ்பெயின் வாக்குறுதி அளிக்காது. இது தொடர்பாக ஸ்பெயினுக்கு நிர்ப்பந்தம் அளிக்க, அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்றும் ரோப்லெஸ் குறிப்பிட்டுள்ளார்.