காசாவிலுள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 11பேர் உயிரிழப்பு
2024-01-26 10:12:31

பாலஸ்தீனத் தொலைக்காட்சி நிலையம் 25ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, அன்றிரவு மத்திய காசாவின் நுசைரிட்டிலுள்ள அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் படை தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்தது 11பேர் உயரிழந்தனர். அதோடு, பலர் இன்னும் இடிபாடுகளில் புதைந்தனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

மேலும், அன்று காசாவின் தென் பகுதியிலுள்ள கான் யூனிஸ் நகர் மீது இஸ்ரேல் படை தொடர்ந்து தீவிர வான் தாக்குதல் நடத்தி கடும் உயிரிழப்பு மற்றும் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உள்ளுர் மருத்துவமனைகள் பல இயல்பாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காசா பிரதேசத்தின் சுகாதார துறையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

காசா பிரதேசத்தின் சுகாதார அமைப்பு 25ஆம் நாள் வெளியிட்ட தரவின்படி, கடந்த 24மணிநேரத்தில் மட்டும், இஸ்ரேல் படையின் தாக்குதலால், 200பேர் உயிரிழந்தனர். 370பேர் காயமடைந்தனர்.