பிரான்ஸ் அரசுத் தலைவர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
2024-01-26 18:57:51

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் பிரான்ஸ் அரசுத் தலைவர் இமானுவேல் மேக்ரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

2 நாள்கள் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியுடன் வியாழக்கிழமை சந்திப்பு நடத்தினார்.