ஈரானில் நிகழ்ந்த தாக்குதலில் 9 பாகிஸ்தானியர்கள் பலி
2024-01-28 19:55:33

ஈரானின் தென்கிழக்கு பகுதியிலுள்ள சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் மாநிலத்தில் ஜனவரி 27ஆம் நாள் நிகழ்ந்த தாக்குதலுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் 28ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமுற்றனர்.

ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இவ்வறிக்கையில், பாகிஸ்தான் அரசுக்கும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்ததோடு, இத்தாக்குதல் குறித்து ஈரான் புலனாய்வு செய்து வருவதாக கூறினார்.

பாகிஸ்தான் ஈரானுடன் தொடர்பை நிலைநிறுத்தி, இச்சம்பவத்தை உடனடியாக புலனாய்வு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 27ஆம் நாள் தெரிவித்தார்.