உலகில் சீன இயக்கு ஆற்றல் மின்கலங்களின் செல்வாக்கு
2024-01-28 20:04:05

சீனா மீதான ஏற்றுமதி கட்டுப்பாட்டை அமெரிக்க அரசு வலுப்படுத்தி வருவதால், சீனாவின் மின்கலப் பொருட்களை அதிகமாக சார்ந்திருக்கும் தென் கொரிய வாகன தொழில் நிறுவனங்களுக்கு இன்னல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் முக்கிய மின்கலப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை அனுமதிக்க வேண்டும் என இத்தொழில் நிறுவனங்கள் அமெரிக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

அதே வேளையில் அமெரிக்காவின் டெஸ்லா கூட்டு நிறுவனம், ஒத்த இன்னலைச் சந்தித்துள்ளது. Cybertruck எனும் புதிய வகை மின்னாற்றல் வாகனத்தின் மின்கலத்தின் உற்பத்தி தேக்க நிலையில் சிக்கிக்கொண்டுள்ளதால், இத்தொழில் நிறுவனம் சீனாவின் மின்கலத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அவசரமாக உதவிகளைக் கேட்க வேண்டியிருந்தது.

சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப வாரியம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு சீனாவின் இயக்கு ஆற்றல் மின்கலங்களின் ஏற்றுமதி 127.4 ஜிகாவாட் Gigawatt மணி நேரத்தை எட்டியுள்ளது. இது 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 87.1 விழுக்காடு அதிகரித்து, சந்தை அளவு தொடர்ந்து 7 ஆண்டுகளாக உலகின் முன்னணியில் இருக்கிறது. ஐரோப்பா, இயக்கு ஆற்றல் மின்கல ஏற்றுமதியின் மிக பெரிய சந்தையாகும். இதை அடுத்து, அமெரிக்கா மற்றும் தென் கிழக்காசியா ஆகும்.

போட்டியில் பல மேம்பாடுகள், சீனாவின் இயக்கு ஆற்றல் மின்கலத் தொழில் சாதனையைப் பெறுவதற்குக் காரணமாகும். முதலில், இயக்கு ஆற்றல் மின்கல உற்பத்தியின் அனைத்து முக்கிய மூலப்பொருட்களும் சீனாவில் சுயமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. முழுமையான இயக்கு ஆற்றல் மின்கல தொழில் சங்கிலி உருவாகியுள்ளது. சீனாவின் புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை உலகளவில் வகிக்கும் விகிதாசாரம் 60 விழுக்காட்டைத் தாண்டி, கடந்த 9 ஆண்டுகளில் உலகில் முதலாவது இடத்தில் வகித்தது. இயக்கு ஆற்றல் மின்கலங்களின் வளர்ச்சியில் மேலதிக வாய்ப்புகள் காணப்பட்டுள்ளன. இரண்டு, சீனாவின் மின்கலப் பொருட்கள், தரம் மற்றும் குறைந்த செலவினால், பன்னாட்டு வாகன தொழில் நிறுவனங்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் முக்கியமானது, தொழில் நுட்ப புத்தாக்கத்தில் நீண்டகாலமாக ஊன்றி நின்று, உலகமயமாக்க பரவலை விரைவுபடுத்துவது, சீனத் தொழில் நிறுவனங்கள் வெற்றி பெறுவதற்குத் திறவுகோலாகும்.

சீனாவின் இயக்கு ஆற்றல் மின்கலத் தொழிலின் வளர்ச்சி, உலக வாகனத் தொழில், பசுமை மற்றும் கரி குறைந்த வளர்ச்சியை நோக்கி மாறுவதை முன்னேற்றி, உலகளவில் செல்வாக்கைப் பெற்றுள்ளது. சீனாவின் இயக்கு ஆற்றல் மின்கலம் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி வலிமைப் பெற்று, பல தொழில்கள் விரைவாக வளர்ந்து வருவதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கைவிட முடியாத சந்தையாக சீனா விளங்குகிறது. இது மட்டுமல்ல, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான ஆற்றலாகவும் சீனா இருக்கிறது.