சீன-அமெரிக்க உறவு பற்றிய வாங்யீயின் கருத்து
2024-01-28 16:54:17

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ, அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசுத் தலைவரின் துணையாளர் ஜேக் சல்லிவனுடன் ஜனவரி 26, 27 ஆகிய நாட்களில் பாங்காக் நகரில் புதிய சுற்று சந்திப்பு நடத்தினார். இரு நாட்டு அரசுத் தலைவர்கள் சான் பிரான்சிஸ்கோ சந்திப்பில் உருவாக்கிய ஒத்தக் கருத்துகள், சீன-அமெரிக்க உறவின் முக்கிய உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் முதலியவை குறித்து, அவர்கள் இருவரும் மனம் திறந்த நெடுநோக்கு தொடர்பு மேற்கொண்டனர்.

வாங்யீ கூறுகையில், இரு நாடுகள் ஒன்றுக்கொன்று மதிப்பளித்தல், சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்புகளின் மூலம் கூட்டு வெற்றி பெறுதல் ஆகியவற்றை முன்னேற்றி, இரு நாட்டுறவின் சரியான வளர்ச்சிக்கான வழிமுறையை நாட வேண்டும் என்றார்.

மேலும், ஒரே சீனா என்ற கோட்பாடு மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான 3 கூட்டறிக்கையை அமெரிக்கா பின்பற்றி, சீனாவின் சமாதான ஒன்றிணைப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தவிரவும், மத்திய கிழக்கு, உக்ரைன், கொரிய தீபகற்பம், தென் சீனக் கடல் உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் குறித்து அவர்கள் இருவரும் விவாதம் நடத்தினார்.