வசந்த விழா கலை நிகழ்ச்சியின் பரவல் நடவடிக்கை நியூயார்க்கில் நடைபெற்றது
2024-01-28 16:54:49

சீன ஊடக குழுமத்தால் நடத்தப்பட்ட வசந்த விழா கலை நிகழ்ச்சியின் பரவல் நடவடிக்கை அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்நடவடிக்கை வசந்த விழாப் பண்பாட்டை சங்கிலியாகக் கொண்டு, சர்வதேச பண்பாட்டுப் பரிமாற்றத்தை விரைவுபடுத்தியுள்ளது. ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி சாங் ஜுன், ஐ.நா துணைத் தலைமைச் செயலாளர் மோரதினோஸ் (Moratinos), ஐ.நாவுக்கான அமெரிக்கா, ஜப்பான், போலாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா முதலிய நாடுகளின் தூதர்கள், தூதாண்மை அலுவலர்கள், ஐ.நா செயலகத்தின் அலுவலர்கள், பல்வேறு துறை பிரமுகர்கள் ஆகியோர் இந்நடவடிக்கையில் பங்கெடுத்தனர். சீன ஊடக குழுமத்தால் நடத்தப்பட்டுள்ள வசந்த விழா கலை நிகழ்ச்சி பரவல் நடவடிக்கை துவங்கியது.

சீன ஊடக குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹாய்சியுங் காணொலி மூலம் உரை நிகழ்த்தினார். வசந்த விழா, சீனத் தேசத்தின் மிக முக்கிய பண்டிகையாகும். உலகளவில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள், வேறுபட்ட வடிவத்தில் வசந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். வசந்த விழாவுக்கு முந்தைய இரவில் கலை நிகழ்ச்சியைப் பார்ப்பது, சீன மக்களின் புதிய பழக்க வழக்கமாக மாறியுள்ளது. வசந்த விழா கலை நிகழ்ச்சி தொடர்ந்து 41 ஆண்டுகளாக நடத்தப்பட்டு, உலக சீனாவை அறிந்து கொள்ளும் பண்பாட்டு நிகழ்வாக விளங்குகிறது. இவ்வாண்டு சீன ஊடக குழுமம் 68 மொழிகள் உள்ளிட்ட பரவல் மேம்பாட்டை முழுமையாக வெளிக்கொணர்ந்து, வசந்த விழா கலை நிகழ்ச்சியைப் பரவல் செய்து, உலக மக்கள் சீன வசந்த விழா மற்றும் சீனத் தேசப் பண்பாடுகளின் தனிச்சிறப்புகளை உணர்ந்து கொள்ளச் செய்யும் என்று ஷென் ஹாய்சியுங் உரையில் தெரிவித்தார்.