ஏடன் வளைகுடாவில் ஏவுகணையால் தாக்கப்பட்ட வணிகக் கப்பலின் மீட்புதவிக்கு உதவிய இந்திய கடற்படை
2024-01-28 16:43:10

ஏடன் வளைகுடாவில் ஏவுகணையால் தாக்கப்பட்ட வணிகக் கப்பலான மார்லின் லவுண்டாவின் (Marlin Launda) SOS அழைப்பிற்கு, இந்தியக் கடற்படையின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உதவிக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

 மார்லின் லவுண்டா வணிகக் கப்பல் வெள்ளிக்கிழமை இரவு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இக்கப்பல் தீப்பிடித்தது. மேலும், இக்கப்பலில் 22 இந்தியர்கள் மற்றும் ஒரு வங்கதேச பணியாளர்கள் இருந்துள்ளனர்.   

இக்கப்பலில் தீயை அணைக்கும் முயற்சியில் அணுசக்தி, உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்பு குழு மற்றும் தீயணைப்பு உபகரணங்களை ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் பயன்படுத்தியதாக, இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.