ஈராக் மற்றும் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை
2024-01-28 18:32:56

ஈராக்கில் அமெரிக்காவின் தலைமையிலான சர்வதேச கூட்டணியின் இருப்பு முடிவுக்கு வருவது பற்றி விவாதிக்கும் வகையில் ஈராக்கும் அமெரிக்காவும் ஜனவரி 27ஆம் நாள் முதலாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தின என்று ஈராக் தலைமையமைச்சரின் தகவல் தொடர்பு பணியகம் அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஈராக் தலைமையமைச்சர் அல் சுதானி முதலாவது சுற்று பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கினார். ஆனால் வேறு விபரங்கள் வெளியிடப்படவில்லை என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

2003ஆம் ஆண்டு அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தது. 2011ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்கா ஈராக்கிலிருந்து படை வெளியேற்றியது. சிறிய படைவீரர்கள் மட்டுமே ஈராக்கில் இன்னும் நிறுத்தப்பட்டுள்ளனர். 2014ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, மேற்கு மற்றும் வட ஈராக்கில் உள்ள அதிக பகுதிகளைக் கைபற்றிய பின், அமெரிக்காவின் தலைமையிலான சர்வதேச கூட்டணி, இவ்வமைப்பைத் தாக்க ஈராக்கிற்கு படைவீரர்களை அனுப்பியது. 2022ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் ஈராக் தலைமை செயலாளரின் தகவல் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் சர்வதேச கூட்டணியின் போரிடும் கடமை முடிவுக்கு வந்தது. ஈராக் ராணுவ வட்டாரம் அனைத்து ராணுவ தளங்களையும் கட்டுப்பட்டுத்தும் அதிகாரத்தைப் பெற்றது. ஆலோசகராக வேலை செய்யும் வெளிநாட்டு ராணுவ வீரர்கள் ஈராக்கில் இன்னும் தங்கி, ஈராக் படைக்கு ஆதரவளிக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.