சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட இலங்கையின் மீன்பிடி படகு
2024-01-29 17:08:35

ஆறு இலங்கை மீனவர்களை கொண்ட மீன்பிடி இழுவை படகு ஒன்று, சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கையின் மீன்வளத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

 இப்படகு அரபிக்கடலில் கடத்திச் செல்லப்பட்டதாக, இலங்கையின் மீன்வளம் மற்றும் நீரியல் வளங்கள் துறையின் பொது இயக்குனர்  சுசந்த கஹவத்த ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது தெரிவித்தார். 

 லொரென்சோ புத்தா-4(Lorenzo Putha-4) என்னும் இப்படகு ஜனவரி 12 ஆம் நாள் இலங்கையில் இருந்து புறப்பட்டது என்றும், இக்கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து 1,160 கடல் மைல் தொலைவில் கடத்திச் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.   

 இக்கப்பலுடன் இலங்கை அதிகாரிகள் எந்தத் தொடர்பும் பெறவில்லை என்றும், அருகிலிருந்த மற்றொரு படகிலிருந்து அவர்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.