அமெரிக்க ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி இடையே சர்ச்சை தீவிரமாகுதல்
2024-01-29 10:39:06

அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் அவையில் குடியரசுக் கட்சியினர் 28ஆம் நாள் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அலெசாண்ட்ரோ மயோர்காஸ் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். 2024ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலால், அமெரிக்க ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியிடையே உள்ள சர்ச்சை தீவிரமாகி வருகிறது.

அண்மையில், இவ்விரு கட்சிகள் குடியேற்ற பிரச்சினை குறித்து ஒன்றுக்கு ஒன்று எதிர்ப்பு தெரிவித்தன. அது குறித்த உடன்படிக்கைகள் உருவாகுவதில் அடுத்தடுத்து தோல்வியடைந்துள்ளது. மேலும் பிரதிநிதிகள் அவைத் தலைவரும், குடியரசுக் கட்சியினருமான ஜேம்ஸ் மைக்கேல் ஜான்சன் கட்சியில் கடின நிலைப்பாடு கொண்டோரின் பெரும் அழுத்தத்தை எதிர்க்கொண்டுள்ளார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற குரல்கள் கட்சியில் எழுந்துள்ளன.