பாலஸ்தீன அகதிகளுக்குரிய நிவாரணப் பணிகளுக்கான நிதியுதவி நிறுத்தம்
2024-01-29 10:37:15

அண்மை கிழக்குப் பகுதிக்கான ஐ.நாவின் பாலஸ்தீன அகதிகள்  நிவாரணம் மற்றும் பணி முகாமைச் சேர்ந்த பணியாளர்கள் கடந்த ஆண்டின் அக்டோபரில் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதனால், இந்த முகாமின் நிவாரணப் பணிகளுக்கான நிதியுதவியை நிறுத்துவதாக பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் ஜனவரி 27ஆம் நாள் அறிவித்தன.

இந்நிலையில், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் அமைப்புகளுக்கு வழங்கும் நிதியுதவிகளை நிறுத்துவதை இஸ்ரேல் ஊக்குவிப்பதாக பாலஸ்தீனத் தலைமையமைச்சர் முகமது இப்ராஹிம் ஷ்தாயே ஜனவரி 28ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளதோடு, தொடர்புடைய நாடுகள் தங்களது முந்தைய முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.