அரசு சார் தொழில் நிறுவனங்களின் இலாபம் 7.4 விழுக்காடு அதிகரிப்பு
2024-01-29 11:28:52

2023ஆம் ஆண்டில் சீனாவில் அரசு சார் தொழில் நிறுவனங்களின் இயக்க நிலைமை குறித்த அறிக்கையைச் சீன நிதி துறை அமைச்சகம் 29ஆம் நாள் வெளியிட்டது.

இதில் தொடர்புடைய தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் சீனாவின் அரசு சார் தொழில் நிறுவனங்களின் வருமானத் தொகை 85 இலட்சத்து 73 ஆயிரத்து 61 கோடி யுவானாகும். இது, 2022ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை காட்டிலும் 3.6 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதன் இலாபத் தொகை 4 இலட்சத்து 63 ஆயிரத்து 328 கோடி யுவானாகும். இது, 2022ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.4 விழுக்காடு அதிகமாகும். 2023ஆம் ஆண்டில் சீனாவின் அரசு சார் தொழில் நிறுவனங்களின் முக்கிய நலன் சார்ந்த இலக்குகள் தொடர்ந்து நிதானமாக உயர்ந்துள்ளதோடு, மீட்சி முன்னேற்றப் போக்கும் சீராக வலுப்பட்டுள்ளது.