சீனாவின் மனித உரிமை லட்சியத்தின் வளர்ச்சி
2024-01-29 19:07:51

சீனாவின் மனித உரிமை லட்சியத்தின் வளர்ச்சி குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஜனவரி 29ஆம் நாள் கூறுகையில், சீனா, சீனப் பாணி நவீனமயமாக்கத்துடன், வல்லரசு கட்டுமானம், தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி ஆகியவற்றைப் பன்முகங்களிலும் முன்னேற்றி வருகிறது. இந்த இலக்கை நனவாக்கும் போக்கில், நவீனமயமாக்க கட்டுமானத்தின் சாதனைகளின் மூலம், பொது மக்களுக்கு மேலும் அதிகமாகவும் நேர்மையாகவும் சீனா நன்மை புரிந்து, மனதி உரிமை பாதுகாப்பு நிலையை உயர்த்தி, மக்களின் சுதந்திரமான பன்முக வளர்ச்சியை முன்னேற்றும் என்றார்.

மேலும், சரவ்தேசச் சமூகத்துடன் இணைந்து, மனித உரிமையை உறுதியுடன் பேணிக்காத்து, உலக மேலாண்மையில் ஆக்கமுடன் பங்கெடுத்து, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.