1197 பாசனப் பகுதிகளின் கட்டுமானம் மற்றும் சீரமைப்புத் திட்டப்பணிகளை விரைவுபடுத்தும் சீனா
2024-01-29 10:43:55

2024ஆம் ஆண்டில் நீர்ப் பாசனப் பகுதிகளின் நவீனமயமாக்கக் கட்டுமானம் மற்றும் சீரமைப்பைச் சீனா விரைவுபடுத்தவுள்ளது. இது தொடர்பில் சீன நீர்வள அமைச்சகம் வெளியிட்டுள்ள  தகவலின்படி, இவ்வாண்டில் அரசுக் கடன் நிதி ஆதரவுடன், நாடளவில் 1197 பாசனப் பகுதிகளின் கட்டுமானம் மற்றும் நவீனமயமாக்க சீரமைப்புத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். அவற்றில் 175 பாசன பகுதிகள் புதிதாக கட்டியமைக்கப்படும். 1022 பாசன பகுதிகள் சீரமைக்கப்படும். மேலும், நீர்ப் பாசனப் பகுதிகளின் முக்கியத் திட்டப்பணிகளும் உயர் தரமான வயலின் கட்டுமானங்களும் ஒருங்கிணைக்கப்படுவதோடு, நீர்ப் பாசனம் மற்றும் வடிகால் அமைப்பு முறை தொடர்ந்து மேப்படுத்தப்படும் என்று சீன நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.