பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் நிவாரணம் மற்றும் பணி முகாமுக்கு ஐ.நா ஆதரவு
2024-01-30 19:49:35

அண்மை கிழக்குப் பகுதியிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் நிவாரணம் மற்றும் பணி முகாமின் மனித நேயப் பணியைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று ஐ.நா தலைமைச் செயலாளரின் செய்தித்தொடர்பாளர் துஜாரிக் Dujarric ஜனவரி 29ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.

அண்மையில், இம்முகாமைச் சேர்ந்த பணியாளர்கள் கடந்த ஆண்டின் அக்டோபரில் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதனால், இந்த முகாமின் நிவாரணப் பணிகளுக்கான நிதியுதவியை நிறுத்துவதாக பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் ஜனவரி 27ஆம் நாள் அறிவித்தன.

செய்தியாளர் கூட்டத்தில் துஜாரிக் கூறுகையில், இந்த வழக்கை “விரைவாக பயன்தரும் முறையில்” புலனாய்வு செய்வதை உத்தரவாதம் செய்யும் வகையில் ஐ,நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ், ஐ.நாவின் கண்காணிப்பு அலுவலகத்தின் பொறுப்பாளரைச் சந்தித்தார் என்று தெரிவித்தார். நிதியுதவியை மீட்பது குறித்து விவாதிக்கும் வகையில் இம்முகாமின் நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவியை வழங்கும் முக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை குட்ரைஸ் 30ஆம் நாள் சந்திப்பார் என்றும், இம்முகாமின் செயலின் தொடர்ச்சித் தன்மையை உத்தரவாதம் செய்து, பொது மக்களின் அவசர தேவையை நிறைவேற்ற வேண்டும் என குட்ரேஸ் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.