சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் மீட்பு
2024-01-30 17:17:40

கடந்த சனிக்கிழமை அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட இலங்கை மீன்பிடி இழுவை படகு மற்றும் அதன் ஆறு பணியாளர்கள் சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

மூன்று கடற்கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட இலங்கை பணியாளர்கள் மற்றும் லொரென்சோ புத்தா 4 (Lorenzo Putha-4) என்ற மீன்பிடிக் கப்பலும், சீஷெல்ஸ் தலைநகருக்கு கொண்டு செல்லப்பட்டதாக கடற்படையின் ஊடக இயக்குனர் கயான் விக்ரமசூரிய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு  சீஷெல்ஸ் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக விக்கிரமசூரிய தெரிவித்தார்.