ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி--ஐ.நா தலைமைச் செயலாளர் தொடர்பு
2024-01-30 09:44:20

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் நிலை பிரதிநிதி ஜோசப் போரெல் ஃபோண்டெல்ஸ், ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் ஆகியோர் ஜனவரி 28ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டனர் என்று ஜனவரி 29ஆம் நாள் ஐரோப்பிய வெளியுறவுச் சேவை தெரிவித்தது. அண்மை கிழக்குப் பகுதிக்கான ஐ.நாவின் பாலஸ்தீன அகதிகள்  நிவாரணம் மற்றும் பணி முகாமைச் சேர்ந்த பணியாளர்களின் மீதான குற்றச்சாட்டு, மத்திய கிழக்கு நிலைமை முதலியவை குறித்து அவர்கள் விவாதித்தனர்.

தற்போதைய காசா நிலைமையில் அந்த முகாமின் பங்கு மிக முக்கியமானது. 20 இலட்சம் மக்களுக்கு அந்த முகாம் மற்றும் பிற ஐ.நா. நிறுவனங்களின் உதவி அவசரமாக தேவைப்படுகிறது என்று போரெல் தெரிவித்தார்.