2ஆவது சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சியில் 90க்கு மேலான நிறுவனங்கள் விண்ணப்பம்
2024-01-30 15:10:32

சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான சீன கவுன்சிலின் கூட்டம் ஜனவரி திங்கள் 30ஆம் நாள் நடைபெற்றது. 2ஆவது சீன சர்வதேச விநியோகச் சங்கிலி பொருட்காட்சிக்கான விண்ணப்பப் பணி தடையின்றி நடைபெற்று வருகிறது. இது வரை, 90க்கும் மேலான நிறுவனங்கள் இதில் கலந்துகொள்ள விண்ணபித்துள்ளன. 100க்கும் மேலான நிறுவனங்கள் இதில் பங்கெடுக்கும் விருப்பம் தெரிவித்தன.

2ஆவது சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி இவ்வாண்டு நவம்பர் 26ஆம் நாள் முதல் 30ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. தற்போது, இதற்கான ஆயத்தப்பணிகள் சுறுச்சுறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளையில், இதில் கலந்துகொள்வதற்கு நேரடியாகவும் இணையம் வழியாகவும் விண்ணப்பம் செய்யும் முறை தொடங்கியது.