அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் மீது ஜனநாயக கட்சி நிர்ப்பந்தம் திணித்தல்
2024-01-30 10:04:11

“தி ஹில்” என்ற செய்தித்தாள் 29ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய பைடன் அரசு முடிவு செய்தது குறித்து வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டுமென ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சுமார் 20பேர் உருவான இரு அவைகள் கூட்டணி அன்று கோரிக்கை விடுத்துள்ளது.

ஆயுதங்கள் விற்பனை அல்லது பரிமாற்றத்தை நாடாளுமன்றம் மேற்பார்வை செய்ய முடியும் என்பது கட்டாயம். மனித நேய கோட்பாடு மற்றும் அமெரிக்க சட்டத்தை அது பின்பற்றுமா என்பதையும் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்குத் தீங்கு விளைவிக்குமா என்பதையும் நாடாளுமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.