பிலிப்பைன் மக்கள் ஹுவாங் யன் தீவில் நுழைந்த சம்பவம் பற்றி சீனா கருத்து
2024-01-31 18:54:44

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் சட்டவிரோதமாக சீனாவின் ஹுவாங் யன் தீவின் கற்பாறை பகுதியில் 28ஆம் நாள் நுழைந்தனர். சீனக் கடல் காவற்துறை அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அங்கிருந்து வெளியேற்றியது என்று சீனக் கடல் காவற்துறை அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் கன் யு தெரிவித்தார்.

ஹுவாங் யன் தீவு மற்றும் அதற்கு அருகில் உள்ள கடற்பரப்பு மீது சந்தேகத்துக்கு இடமில்லாத அரசுரிமையை சீனா கொண்டுள்ளது. சீனாவின் அரசுரிமையை பிலிப்பைன்ஸ் மீறும் செயலை சீனா எப்போதும் எதிர்க்கிறது. சீனக் கடல் காவற்துறை முன்பு போல சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பரப்பில் அரசுரிமையைப் பேணிகாத்து, சட்டத்தை அமலாக்கி, நாட்டின் அரசுரிமை மற்றும் கடல் உரிமை நலன்களை உறுதியாகப் பேணிகாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.