ஷி ச்சின்பிங்கின் முக்கியமான கட்டுரை சீனாவின் ச்சியுஷி இதழில் வெளியிடுதல்
2024-01-31 16:55:06

சீன இனங்களின் பொது சமூக உணர்வை உறுதியாக உருவாக்கி, புது யுகத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இனப்பணியின் உயர்தர வளர்ச்சியை ஊக்குவிப்பது என்ற பெயரில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங்கின் முக்கியமான கட்டுரை, பிப்ரவரி 1ஆம் நாள் "ச்சியுஷி" இதழில் வெளியிடப்பட உள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டிற்குப் பிறகு, சீன பாணி நவீனமயமாக்கல் மூலம் வலிமையான நாட்டைக் கட்டமைப்பது மற்றும் சீன இனங்களின் மறுமலர்ச்சியை ஊக்குவிக்கும் புதிய பயணத்தை, சீனாவில் உள்ள அனைத்து இன மக்களும் தொடங்கியுள்ளனர். சீன இனங்களின் நீண்ட வரலாற்றின் அடிப்படையில், சீன இனங்களின் பொது சமூகத்தின் தத்துவார்த்த அமைப்பின் கட்டுமானத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். அனைத்து இனங்களிடையிலான விரிவான பரிமாற்றங்கள் மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவித்து, சீன இனங்களின் பெரும் ஒற்றுமையின் மூலம், சீன பாணி நவீனமயமாக்கலை நாம் ஊக்குவிக்க வேண்டும். சீன இனங்களின் கதையை நன்றாகச் சொல்லி, சீன இனங்களின் பொது சமூகத்தின் விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.