சீன-வெளிநாட்டு மக்களின் தொடர்புக்கான வசதிமயமாக்க நடவடிக்கை
2024-01-31 18:41:24

சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் ஒன்றுக்கொன்று விசா சலுகை இல்லா உடன்படிக்கையை சீனா அண்மையில் மேற்கொண்டது.

இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஜனவரி 31ஆம் நாள் கூறுகையில், சீன-வெளிநாட்டு மக்களின் தொடர்புக்கான வசதிமயமாக்க நடவடிக்கைகளைச் சீனா தொடர்ந்து மேம்படுத்தி, சீன மக்களின் வெளிநாட்டுப் பயணத்தின் பாதுகாப்பை பெரிதும் பேணிக்காக்கும் என்றும், மேலதிக வெளிநாட்டவர்கள் சீனாவில் பயணம் மேற்கொண்டு, சீனாவின் ஈர்ப்பு ஆற்றலை உணர்ந்து கொள்வதை வரவேற்கிறோம் என்றும் தெரிவித்தார்.

மேலும், விசா கொள்கையை மேம்படுத்தி, சீன-வெளிநாட்டு மக்களின் தொடர்பை முன்னேற்றுவது, சீனாவின் உயர்தர வளர்ச்சி மற்றும் உயர்நிலை திறப்புப் பணிக்கு தூதாண்மை மூலம் சேவை புரியும் முக்கிய நடவடிக்கையாகும். சீன-வெளிநாட்டு நட்பார்ந்தப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பரம் பயனுள்ள ஒத்துழைப்புக்கு இது மேலதிக வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.