வட்டி விகிதம் குறைப்பு இல்லை என அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
2024-02-01 10:09:58

உள்ளூர் நேரப்படி ஜனவரி 31ஆம் நாள், அன்று அறிவிக்கப்பட்ட ஃபெடரல் நிதி விகித முடிவு குறித்து, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பாவெல் உரை நிகழ்த்தினார். வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவெடுப்பதற்கு முன், பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது என்பதற்கான மேலதிக ஆதாரங்களை இவ்வங்கி கண்டுபிடிக்க வேண்டும். இப்போதைக்கு, மார்ச் கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கு "சாத்தியமில்லை" என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்த நிலையில், பொருளாதாரம் மந்தமடையவில்லை, வேலையின்மை விகிதம் அதிகரிக்கவில்லை. தற்போதைய செயல்முறை தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.

ஜனவரி 31ஆம் நாள் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி இரு நாட்கள் நாணயக் கொள்கை கூட்டத்தை முடித்து, ஃபெடரல் நிதி விகிதத்திற்கான இலக்கு அளவு 5.25 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரை மாற்றம் இல்லை என்று அறிவித்தது.