2024ஆம் ஆண்டு வசந்த விழாக் கலை நிகழ்ச்சியின் செய்தியாளர் கூட்டம்
2024-02-01 19:34:20

சீன ஊடகக் குழுமம் தயாரித்த 2024ஆம் ஆண்டு வசந்த விழாக் கலை நிகழ்ச்சியின் செய்தியாளர் கூட்டம் பிப்ரவரி முதல் நாள் நடைபெற்றது. இவ்வாண்டின் கலை நிகழ்ச்சி மற்றும் தொழில் நுட்பப் புத்தாக்கம் பற்றி இக்கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான பெய்ஜிங்கிலுள்ள முக்கிய அரங்கு மற்றும் 4 நகரங்களிலுள்ள கிளை அரங்குகளின் மேடை வடிவமைப்புகள் வெளியிடப்பட்டன. சீன ஊடகக் குழுமத்தின் துணை இயக்குநர் வாங் சியௌட்சென் இக்கூட்டத்தில் பங்கெடுத்தார்.

சீன ஊடகக் குழுமத்தின் பண்பாடு மற்றும் கலை நிகழ்ச்சிப் பிரிவின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், இவ்வாண்டின் வசந்த விழாக் கலை நிகழ்ச்சியில், வண்ணமயமான பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் உயிராற்றல் மிக்க உள்ளடக்கங்கள், கோலாகலமான மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும் என்றார்.

இந்தக் கலை நிகழ்ச்சி பிப்ரவரி 9ஆம் நாளிரவு 8 மணிக்கு நேரலை வழியாக ஒளிப்பரப்பப்படும். சீனாவின் 100க்கும் மேலான நகரங்களிலும், உலகளவில் 34 நாடுகளைச் சேர்ந்த 70க்கும் மேலான நகரங்களிலும், இக்கலை நிகழ்ச்சிகள் காணப்பட முடியும்.

மேலும், சீன ஊடகக் குழுமத்தின் 68 மொழிப் பிரிவுகள், உலகத்தின் 200க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1500க்கும் மேலான ஊடகங்களுடன் இணைந்து, இக்கலை நிகழ்ச்சி பற்றிய தகவல்களை வெளியிடவுள்ளன.