பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் நிவாரணம் மற்றும் பணி முகாமுக்கான நிதியுதவி மீட்டெடுக்க ஐ.நா வேண்டுகோள்
2024-02-01 09:38:09

அண்மை கிழக்குப் பகுதியிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் நிவாரணம் மற்றும் பணி முகாமை சேர்ந்த பணியாளர்கள் பலர், கடந்த அக்டோபரில் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலில் ஈடுபட்டதாக சில நாட்களுக்கு முன்பு குற்றஞ்சாட்டப்பட்டனர். இதனால் இம்முகாமுக்கு நிதியுதவியை இடைநிறுத்துவதாக  ஜப்பான், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பல நாடுகள் அறிவித்துள்ளன.

அண்மை கிழக்குப் பகுதியிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் நிவாரணம் மற்றும் பணி முகாம் காசாவில் மனித நேய பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு ஆதரவளிக்கும் வகையில், தொடர்புடைய நாடுகள் நிதியுதவி வழங்கலை மீட்டெடுக்க வேண்டுமென ஜனவரி 31ஆம் நாள் ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.

இம்முகாமின் தொடர் சேவை காசா மக்களுக்கு மிகவும் முக்கியமாக இருப்பதோடு, ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரை பகுதி, லெபனான் மற்றும் சிரியா உள்ளிட்ட இடங்களின் மனித நேய நிலைமையின் மேம்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கும் என்று ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸ் அன்று தெரிவித்தார்.