ஃபென்டானில் நெருக்கடியைத் தீர்ப்பதில் அமெரிக்கா தானே தன்னில் இருந்து காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்
2024-02-01 10:43:13

ஜனவரி 30ஆம் நாள் சீனத் தேசிய போதைப்பொருள் தடுப்புக் குழுத் தலைவர் பெய்ஜிங்கில் அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்புக்கான கூட்டு பிரதிநிதிக் குழுவினர்களைச் சந்தித்துள்ளார். சீனாவும் அமெரிக்காவும் இருதரப்பு உறவுகளை மேலாண்மை செய்ய முயற்சிக்கிற தருணத்தில், இக்கூட்டம் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு அறிகுறியை வெளியிட்டது என்று அமெரிக்கக் கூட்டுச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அதே நாளில், சீன-அமெரிக்க போதைப்பொருள் ஒழிப்பு ஒத்துழைப்புப் பணிக்குழு தொடங்கப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோவில் சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள உடன்பாடுகளை நடைமுறைப்படுத்த இது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் என்று கருதப்படுகிறது.

உலக அளவில் மிக முனைப்பான ஃபென்டானில் பிரச்சினையைக் கொண்ட அமெரிக்காவிலேயே ஃபென்டானில் பொருட்களை வகைப்படுத்தும் அதிகாரப்பூர்வ மேலாண்மை விதிகள் தற்போது வரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோணத்தில் இருந்து பார்த்தால், சீன-அமெரிக்க போதைப் பொருள் ஒழிப்பு ஒத்துழைப்பு, தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வெளிப்புற சூழ்நிலையை அமெரிக்காவுக்கு உருவாக்க உதவும். ஆனால், ஃபென்டானில் நெருக்கடியை வேரிலிருந்து ஒழிப்பதற்கு அமெரிக்கா தானே தன்னில் இருந்து காரணங்களைக் கண்டறிய வேண்டும்.

மேலும் பரந்த துறையில், சீனாவும் அமெரிக்காவும் போதைப்பொருள் ஒழிப்பு ஒத்துழைப்பை மீண்டும் தொடங்கி வைப்பது, சீன-அமெரிக்க உறவு சீராகி வருவதற்கான அறிகுறியாகும். சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளிப்பது, சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி ஆகிய கோட்பாடுகளைப் பின்பற்றும் வரை, இத்தகைய போக்கு தொடர்கிறது. சீன-அமெரிக்க உறவு தொடர்ச்சியாக சீராகி வருவது மீது நம்பிக்கை உள்ளது.