இந்தியாவின் 5 புதிய சதுப்பு நிலங்கள் ராம்சார் பட்டியலில் சேர்ப்பு
2024-02-01 17:02:20

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் பட்டியல் என்றழைக்கப்படும் சதுப்பு நிலங்களின் பட்டியலில், இந்தியா மேலும் ஐந்து சதுப்பு நிலங்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் நாட்டிலுள்ள சதுப்பு நிலங்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

கர்நாடகாவில் உள்ள 3 இடங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள 2 இடங்கள், ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அறிவிப்பை, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டார்.

1971 ஆம் ஆண்டு ஈரானின் ராம்சார் நகரில் கையெழுத்திடப்பட்ட ராம்சார் உடன்படிக்கையில், 1982 ஆம் ஆண்டில் இந்தியாவும் இணைந்தது.   

ராம்சார் உடன்படிக்கை என்பது அரசுகளுக்கிடையேயான சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகும். இது சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பான தேசிய நடவடிக்கை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வழங்கி, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களை அடையாளம் காட்டுகிறது. இது குறிப்பாக நீர்ப்பறவைகளுக்கான வாழ்விடத்தை வழங்குகின்றது.