2023ஆம் ஆண்டு சீனாவின் சேவை வர்த்தகத்தின் உயர்வேக வளர்ச்சி
2024-02-01 17:03:47

சீன வணிக அமைச்சகம் பிப்ரவரி முதல் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு சீனாவின் சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மொத்த மதிப்பு 6 லட்சத்து 57 ஆயிரத்து 543 கோடி யுவானை எட்டி, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 10 விழுக்காடு அதிகமாகும். சேவை வர்த்தக அளவு வரலாற்றில் உச்ச நிலையை எட்டியது. இதில் சுற்றுலா துறையில் சேவை வர்த்தகம் மிக உயர்வேக வளர்ச்சியடைந்து, 2023ஆம் ஆண்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 562 கோடி யுவானை எட்டி, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 73.6 விழுக்காடு அதிகமாகும்.

மேலும், அறிவாற்றல் செறிவான சேவையின் வர்த்தகம் உயர்வேக வளர்ச்சியடைந்தது. 2023ஆம் ஆண்டு, அறிவாற்றல் செறிவான சேவையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு 2 லட்சத்து 71 ஆயிரத்து 937 கோடி யுவானை எட்டி, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 8.5 விழுக்காடு அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.