அதிக பணம் ஈட்டியுள்ள அமெரிக்க ராணுவ தொழிற்துறை நிறுவனங்கள்
2024-02-01 19:05:49

அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு வெளிநாடுகளுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 16 விழுக்காடு அதிகரித்து, வரலாற்றில் இல்லாத அளவிற்கு 23 ஆயிரத்து 800 கோடி அமெரிக்க டாலரை எட்டியது.

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த போர்கள் மூலம் அமெரிக்காவுக்கு ஏராளமான பணம் கிடைத்தது. ஒரு புறம், ரஷிய-உக்ரைன் மோதல் தொடர்ந்தது. பாலஸ்தீன-இஸ்ரேல் பிரதேசத்தில் போர் மீண்டும் மூண்டது. உலகளவில் பிரதேச மோதல்களால், பாதுகாப்பு சூழல் சிக்கலாகியுள்ளது. பல நாடுகள் தற்காப்பை வலுப்படுத்தும் வகையில் ஆயுதங்களை வாங்க வேண்டியிருந்தன. மறு புறம், ஆயுத விற்பனைக்கான வரம்பு முன்பை விட பெருமளவில் உயர்ந்தது. நீண்டகாலமாக, ஆயுத விற்பனை மூலம் போர் களத்தில் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தும் அனுபவம் மற்றும் தரவுகளை அமெரிக்கா பெற்று, ஆயுத உற்பத்தியை மேம்படுத்தி, சந்தையில் மேலதிக விகிதப் பங்கினைப் பெற்றது.

மோதல் மற்றும் போர், பொது மக்களுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அமெரிக்க ராணுவ தொழிற்துறை இதன் மூலம் அதிக பணம் ஈட்டியுள்ளது. ராணுவம், ராணுவ தொழிற்துறை நிறுவனம், நாடாளுமன்ற உறுப்பினர், தேசிய பாதுகாப்பு மற்றும் அறிவியல் ஆய்வு நிறுவனம், சிந்தனை கிடங்கு மற்றும் செய்தி ஊடகம் அடங்கும் மாபெரும் நலன் குழு அமெரிக்காவில் உருவாகியுள்ளது.

2023ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆயுத விற்பனை திட்டம், அமெரிக்காவின் உலகளாவிய நெடுநோக்கு பரவலுக்கு ஒத்தது என்பதை அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை மூலம் அறிந்து கொள்ளலாம். ரஷிய-உக்ரைன் போருக்கு சிக்கலை ஏற்படுத்தியது முதல், கூறப்படும் “இந்து பசிபிக் நெடுநோக்கு திட்டத்தை” முன்னேற்றுவது மற்றும் இஸ்ரேலுக்கு பெரும் ஆதரவளிப்பது வரை, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் கூறியதை போல, “ஆயுத விற்பனை மற்றும் ஒப்படைப்பு, அமெரிக்காவின் முக்கிய தூதாண்மை கொள்கையின் கருவி என கருதப்படுகிறது”. அமெரிக்க அரசு, ஆயுத விற்பனை மூலம், ஐரோப்பா, ஆசிய-பசிபிக், மத்திய கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் தமது செல்வாக்கினை அதிகரித்து, புவிசார் அரசியல் நலன்களைக் கைப்பற்ற முயற்சிக்கின்றது.