ஏமன் மக்களுக்கு அவசர மனித நேய உதவி தேவை
2024-02-02 10:38:32

1 கோடியே 82 இலட்சம் ஏமன் மக்களுக்குத் தேவையான அவசர மனித நேய உதவிகளை வழங்குமாறு ஐ.நா.வின் மனித நேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் பிப்ரவரி முதல் நாள் வெளியிட்ட அறிக்கையில் வேண்டுகோள் விடுத்தது. 2024ஆம் ஆண்டில் 1 கோடியே 76 இலட்சம் ஏமன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்தில்லாத பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள் என்றும் அந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது 45 இலட்சம் ஏமன் மக்கள் வீடுவாசலின்றி அல்லல்பட்டு வருகின்றனர். இதனிடையே, 2024ஆம் ஆண்டில் மனித நேயத் திட்டத்தின் படி நிவாரணம் மற்றும் பாதுகாப்பு சேவைகளை வழங்க 270 கோடி அமெரிக்க டாலர் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.