சீன வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான விளம்பர காணொளி சீம் ரீப்-அங்கோர் சர்வதேச விமான நிலையத்தில் ஒளிபரப்பு
2024-02-02 09:20:12

சீன ஊடகக் குழுமத்தின் வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் விளம்பர காணொளி பிப்ரவரி முதல் நாள் கம்போடியாவின் சீம் ரீப்-அங்கோர் சர்வதேச விமான நிலையத்திலுள்ள பத்துக்கும் மேலான திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. மேலும், டிராகன் ஆண்டு வாழ்த்துகள் தெரிவிப்பு என்ற பரவல் நடவடிக்கையும் அன்று இவ்விமான நிலையத்தில் நடைபெற்றது.

வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் விளம்பர காணொளி, பரவல் நடவடிக்கை, சீன ஊடக குழுமத்தின் வசந்த விழாவுக்கான வண்ணமயமான சிறப்புப் படைப்புப் பொருட்கள், சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சிங்க நடன அரங்கேற்றம் ஆகியவை நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.