போர் லாபம் ஈட்டும் அமெரிக்காவுக்கு 90 விழுக்காட்டினர் கண்டனம்: சி.ஜி.டி.என் கருத்துக் கணிப்பு
2024-02-02 19:41:09

ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டுள்ள புவிசார் மோதல்கள், பன்னாட்டுச் சமூகத்தில் கவலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது, 2023ஆம் நிதியாண்டில் அமெரிக்காவின் வெளிநாட்டு ஆயுதங்களின் விற்பனைத் தொகை 23800 கோடி அமெரிக்க டாலரை எட்டி, புதிய உச்சம் அடைந்துள்ளது. சி.ஜி.டி.என் எனும் தொலைக்காட்சி நிறுவனம் உலகளாவிய இணைய பயனர்களிடையே நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 93.88 விழுக்காட்டினர், உலகளவில் பதற்றம் மற்றும் சர்ச்சையை உருவாக்கி, போர் மூலமாக லாபம் ஈட்டி வரும் அமெரிக்காவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், வெளிநாட்டிலேயே ஆயுதங்களை விற்பதைத் துரிதப்படுத்துவது போன்ற அமெரிக்காவின் செயல், அமைதி மற்றும் வளர்ச்சி என்ற கால ஓட்டத்திற்குப் புறம்பானது என்று 91.98 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.

2023ஆம் ஆண்டில் ஆயுதங்களின் விற்பனைத் தொகையை தவிர, 2024ஆம் நிதியாண்டில் தேசிய பாதுகாப்புக்கான நிதி வரவுச் செலவுத் தொகை  88600 கோடி டாலரை எட்டி, வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தைத் தொட்டது. 

இணைய பயன்பாட்டாளர் ஒருவர் கருத்தைப் பதிவிட்டு, “உலகளவில் அமெரிக்கா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கலந்துக் கொள்ளாத மோதல் கிட்டத்தட்ட எதுவும் இல்லை. நிதி, ராணுவம், அரசியல் துறையில் அமெரிக்கா செலுத்திய மேலாதிக்கம் உலகின் அமைதிக்கு தடையாக அமையும்“ என்று சுட்டிக்காட்டினார்.