ஹுவாங் யன் தீவு பற்றி சீனா கருத்து
2024-02-02 19:00:05

ஹுவாங் யன் தீவு பிரச்சினை பற்றி பிலிப்பைன்ஸ் வெளியிட்ட அறிக்கை குறித்து சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் பிப்ரவரி 2ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், ஹுவாங் யவன் தீவு, சீனாவுக்குரிய உரிமை பிரதேசமாகும். ஹுவாங் யன் தீவு மற்றும் அதற்கு அருகிலுள்ள கடற்பரப்பு மீது சந்தேகத்துக்கு இடமில்லாத அரசுரிமையை சீனா கொண்டுள்ளது. சீனா தொடர்ச்சியாகவும், அமைதியாகவும், பயனுள்ள முறையிலும் ஹுவாங் யன் தீவு மீது அரசுரிமை மற்றும் நிர்வாக உரிமையை பயன்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் உரிமை பிரதேசம், 1898, 1900, 1930 ஆகிய ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹுவாங் யன் தீவு, பிலிப்பைன்ஸின் உரிமை பிரதேசத்திற்கு உள்ளே எப்போதும் இல்லை. ஹுவாங் யன் தீவு, பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் உள்ளது அல்லது ஹுவாங் யன் தீவு, பிலிப்பைன்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருக்கிறது என்பதை சாக்குப்போக்காகக் கொண்டு, இத்தீவு மீது அரசுரிமையை பிலிப்பைன்ஸ் பயன்படுத்துவது, சர்வதேச சட்டத்துக்குப் பொருந்தியதாக இல்லை என்று வாங் வென்பின் தெரிவித்தார்.