சீனாவின் சதுப்பு நிலப்பரப்பு ஆசியாவில் முதலிடம் வகிக்கிறது
2024-02-02 17:16:26

படம்:CFP

பிப்ரவரி 2ஆம் நாள் 28ஆவது உலக சதுப்பு நில தினமாகும். “சதுப்பு நிலம் மற்றும் மனித குலத்தின் நன்மை” என்பது இவ்வாண்டு சதுப்பு நில தினத்தின் கருப்பொருளாகும். சீனத் தேசிய வனத் தொழில் மற்றும் புல்வெளி அலுவலகம் புதிதாக வெளியிட்ட அறிக்கையின்படி, இது வரை சீனாவில் சதுப்பு நிலப்பரப்பு 5 கோடியே 63 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டரை எட்டியுள்ளது. இது, ஆசியாவில் முதலிடம் வகிக்கிறது. உலகில் 4ஆவது இடத்தில் இருக்கிறது. 903 தேசிய சதுப்பு நிலப் பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்கு பிந்தைய பத்து ஆண்டுகளில், சீனாவில் சுமார் 3400 சதுப்பு நிலப் பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 8 லட்சம் ஹெக்டர் சதுப்பு நிலங்கள் புதிதாக அதிகரிக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.