சீன-ஆசியான் பண்பாட்டு பரிமாற்றம் ஆண்டு என்ற நிகழ்வின் துவக்க விழாவுக்கு லீ சியாங் வாழ்த்து கடிதம்
2024-02-02 22:03:34

சீனத் தலைமையமைச்சர் லீ சியாங் பிப்ரவரி 2ஆம் நாள் 2024ஆம் ஆண்டு சீன-ஆசியான் பண்பாட்டு பரிமாற்றம் ஆண்டு என்ற நிகழ்வின் துவக்க விழாவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

 

சீனாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான நட்பார்ந்த பரிமாற்றம் நீண்டகால வரலாறுடையது. இரு தரப்பும் செழிப்பான வண்ணமயமான ஆசியப் பண்பாட்டை உருவாக்கியுள்ளன. பண்டைக்காலம் தொட்டு, தென் கிழக்காசியா, கடல் வழி பட்டுப்பாதையில் உள்ள முக்கிய மையமாக விளங்குகிறது. தற்போது சீன-ஆசியான் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு சீராக வளர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகள் அதிக சாதனைகளைப் பெற்றுள்ளன என்று லீ சியாங் தெரிவித்தார்.

 

சீனாவும் ஆசியானும் நட்புறவை நிலைநிறுத்துவதற்கு இரு தரப்பு உறவின் சமூக அடிப்படையை வலுப்படுத்த வேண்டும் என அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். ஆசியான் நாடுகளுடன் இணைந்து, “சீன-ஆசியான் பண்பாட்டுப் பரிமாற்ற ஆண்டை” வாய்ப்பாக கொண்டு, மேலும் நெருக்கமான சீன-ஆசியான் எதிர்கால பொது சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று லீ சியாங் தெரிவித்தார்.