2025 ஒசாகா உலகப் பொருட்காட்சியின் சீனக் காட்சியகத்தின் கட்டமைப்பு துவக்கம்
2024-02-02 11:18:31

ஜப்பானில் நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டின் ஒசாகா உலகப் பொருட்காட்சியின் சீனக் காட்சியகத்தின் கட்டமைப்புப் பணி பிப்ரவரி 2ஆம் நாள் காலை 10மணியில் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. 

மனிதர் மற்றும் இயற்கையுடனான பொது சமூகத்தின் கூட்டுக் கட்டமைப்பு மற்றும் பசுமை வளர்ச்சிக்கான எதிர்கால சமூகம் என்பது நடப்பு சீன காட்சியகத்தின் கருப்பொருளாகும். 3500 சதுர மீட்டர் பரப்பளவுடன் கூடிய இக்காட்சியகம், ஒசாகா உலகப் பொருட்காட்சியில் வெளிநாடுகள் சொந்தமாகக் கட்டியமைக்கும் காட்சியகங்களில் மிகப் பெரியதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

2025ஆம் ஆண்டின் ஒசாகா உலகப் பொருட்காட்சி 2025ஆம் ஆண்டின் ஏப்ரல் 13முதல் அக்டோபர் 13ஆம் நாள் வரை ஜப்பானின் கன்சாய் பிரதேசத்தின் ஒசாகா நகரில் நடைபெறவுள்ளது.