ஈராக் மற்றும் சிரியா மீதான அமெரிக்காவின் பதிலடி தாக்குதல்
2024-02-03 19:31:21

அமெரிக்காவில் பிப்ரவரி 2ஆம் நாள் மாலை, சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு பெறும் ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்க இராணுவத்தினர் வான் தாக்குதலைத் தொடங்கினர். ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று வீரர்களைக் கொன்றதற்கு பதிலடியாக இந்த இராணுவ நடவடிக்கை நடத்தப்படுவதாக அமெரிக்க அரசு தெரிவித்தது.

இராணுவத் தாக்குதலுக்குப் பின், அமெரிக்க இராணுவப்படை இந்த வான் தாக்குதல் நடத்திய பின் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அமெரிக்காவின் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்வதாகவும், ஆனால், மத்திய கிழக்குப் பகுதி அல்லது உலகின் பிற பகுதிகளில் மோதல் ஏற்படுத்தும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.