ஜெனீவாவில், வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பரப்பரை நடவடிக்கை
2024-02-03 19:33:51

சீன ஊடகக் குழுமம் வழங்கிய வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பரப்பரை நடவடிக்கை பிப்ரவரி 2ஆம் நாள் ஜெனீவாவிலுள்ள ஐ.நாவின் அலுவலகத்தில் நடைபெற்றது. சீனாவின் வசந்த விழாவைக் கொண்டாடும் சீன ஊடகக் குழுமத்தின் கலை நிகழ்ச்சியைக் கண்டுரசிப்போம் என்ற தலைப்பிலான இந்நிகழ்ச்சி வசந்த விழா பண்பாட்டின் மூலம் சர்வதேச மானுட பரிமாற்றத்தை விரைவுபடுத்துகின்றது. ஜெனீவாவிலுல்ள பல்வேறு நாடுகளின் நிரந்தர பிரதிநிதிகள், தூதாண்மை அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட 300 விருந்தினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷென்ஹெய்சியோங் காணொளி மூலம் உரை நிகழ்த்தினார். வசந்த விழா சீனத் தேசத்துக்கு மிக முக்கியமான பாரம்பரிய விழாவாகும். புத்தாண்டின் முந்தைய நாளிரவு சீன ஊடகக் குழுமம் வழங்கும் வசந்த விழா கலை நிகழ்ச்சிப் பார்த்து ரசிப்பது வசந்த விழாக்காலத்தில் சீனர்களின் புதிய வழக்கமாக மாறியுள்ளது. 2024ஆம் ஆண்டு, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆம் ஆண்டுநிறைவாகும். சீன ஊடகக் குழுமம், ஸ்விட்சர்லாந்தின் நண்பர்களுடன் இணைந்து ஒத்துழைப்பை ஆழமாக்கி, அமைதி வளர்ச்சியையும் கூட்டு செழுமையையும் விரைவுபடுத்த விரும்புகின்றது என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகத்தின் பொதுச் செயலாளர் ரொவயா கூறுகையில், கடந்த ஆண்டில் உலகம் பல அறைகூவல்களை எதிர்நோக்கியது. 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்ச் திட்டத்தை நிறைவேற்றுவதில் சீனா ஆற்றிய பங்கிற்கு ஐ.நா நன்றி தெரிவிக்கிறது. சீனாவின் டிராகன் ஆண்டில் அனைவரும் உடல் நலத்துடன் இருக்கவும் முயற்சிகள் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன் என்றார்.