சீன-ஸ்விட்சர்லாந்து உறவுக்கான வளர்ச்சி வாய்ப்புக்கள்
2024-02-04 15:15:40

சீனாவுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கும் இடையிலான உறவு பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு, சீனாவுடன் தூதாண்மை உறவை உருவாக்கியுள்ள முதல் தொகுதி மேலை நாடுகளில் ஒன்றாக ஸ்விட்சர்லாந்து விளங்குகிறது. அதே வேளையில், சீனாவுடன் தாராள வர்த்தக உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள முதலாவது ஐரோப்பிய கண்ட நாடுகளில் ஸ்விட்சர்லாந்து திகழ்கிறது.

அண்மையில், ஸ்விட்சர்லாந்து ஃபெடரல் கவுன்சில் உறுப்பினரும், பொருளாதாரம் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறை அமைச்சருமான பர்மெலின் அண்மையில் சீன ஊடக குழுமத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பட்டியளித்த போது கூறுகையில்,

சீன மக்கள் குடியரசுயுடன் சிறந்த தூதாண்மையுறவை உருவாக்கிய பிறகு இது வரை, 70 க்கும் மேலான ஆண்டுகள் ஆகிவிட்டன. 2014ஆம் ஆண்டு முதல், இரு நாடுகளுக்கிடையில் தாராள வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படத் தொடங்கிய பிறகு, இவ்வாண்டு வரை, 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 2017ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தும் சீனாவும், கலந்தாய்வு மற்றும் பரிமாற்றம் குறித்து விவாதித்து,  கூட்டாக மேம்படுத்தக் கூடிய துறைகளை  உறுதி செய்துள்ளன. அடுத்து, ஒவ்வொரு துறையிலும் உயரக் கூடிய  அளவுக்கு இணங்க, அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையை தொடங்கி வைக்க முடிவெடுக்கப்படும். இரு தரப்புகளுக்கு வெற்றி–வெற்றி என்ற கருத்தை பின்பற்றி, எட்டப்பட்டுள்ள தாராள வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்த பாடுபடுகின்றோம் என்று பார்மலின் கூறினார்.