2023ஆம் ஆண்டு 278000 கோடி யுவான் கடன் வழங்கிய சீன வேளாண்மை வளர்ச்சி வங்கி
2024-02-04 14:29:15

சீன வேளாண்மை வளர்ச்சி வங்கி பிப்ரவரி 3ஆம் நாள் வெளியிட்ட புதிய தரவின்படி, 2023ஆம் ஆண்டில் இவ்வங்கி கொள்கை ரீதியில் நிதி ஆதரவை விரிவாக்கி மொத்தமாக 2லட்சத்து 78ஆயிரம் கோடி யுவான் கடனை வழங்கியுள்ளது. அவற்றில் சிறு மற்றும் குறுத்தொழிலுக்கான முன்னுரிமையுடன் கூடிய கடனின் மொத்த தொகை 5848கோடி 10லட்சம் யுவானை எட்டி 2022ஆம் ஆண்டை விட, 26.32விழுக்காடு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.