இலங்கையில் 76ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்
2024-02-04 19:14:56

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை ராணுவ அணிவகுப்புடன் நடைபெற்றது. நாட்டின் மறுகட்டுமானத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை மக்கள் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை நல்க வேண்டும் என்று சுதந்திர தின உரையில் அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்கே வேண்டுகோள் விடுத்தார்.

பல்வேறு தடைகள் மற்றும் அறைகூவல்களுக்கு மத்தியில் பொருளாதார நிலைத்தன்மையைக் கொண்டு வர அரசு முயன்று வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, அரசுத் தலைவரின் கருணை மன்னிப்பின் அடிப்படையில் 754 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.