போக்குவரத்து சேவைக்கு பனி பொழிவு ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகள்
2024-02-04 20:07:08

சீனாவில் வசந்த விழாவுக்கான போக்குவரத்து சேவை ஜனவரி 26ஆம் நாள் தொடங்கிய பின், அதிக அளவில் மழை மற்றும் பனி வானிலை ஏற்பட்டது. இது, போக்குவரத்து சேவைக்கு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனை எதிர்கொள்ளும் விதம் சீனப் போக்குவரத்து அமைச்சகத்தின் சார்பில் சிறப்பு காணொளி கூட்டம் நடைபெற்றது. இதில், தீவிர வானிலையைச் சமாளிப்பு கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் தலைமை செயல்திறனை வலுப்படுத்துவது, காலதாமதமின்றி பயணமுன்னெச்சரிக்கைத் தகவலை வெளியிடுவது, ரயில் பாதை, நெடுஞ்சாலை, கப்பல் மற்றும் விமானச் சேவையில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு தொழில் நுட்ப திறன் பயிற்சியை அதிகரிப்பது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.